Hyundai i20 Facelift ரூ.6.99 லட்சம் விலையில் அறிமுகமானது
published on செப் 08, 2023 02:34 pm by tarun for ஹூண்டாய் ஐ20
- 42 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய ஸ்டைலிங் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட இன்டீரியர் டிஸைனுடன், i20 ஹேட்ச்பேக் பண்டிகைக் காலத்தில் சிறிய அப்டேட்டை பெறுகிறது.
-
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ.6.99 லட்சத்தில் இருந்து ரூ.11.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
-
இது ஒரு புதிய பேஸ்-ஸ்பெக் எரா வேரியன்ட்டை பெறுகிறது.
-
புதிய வடிவிலான முன் பக்கம், புதிய அலாய் வீல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பின்புற பம்பர் ஆகியவற்றைக் இது கொண்டுள்ளது.
-
இன்டீரியர் புதிய டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே தீம் ஆகியவற்றுடன் பேஸ்லிஃப்ட் -க்கு முன்னால் இருந்ததை போலவே உள்ளது.
-
ஆறு ஏர்பேக்குகள், ESC, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் வெஹிகிள் ஸ்டெபிட்டி மேனேஜ்மென்ட் ஆகியவை இப்போது ஸ்டாண்டர்டானவை.
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை மற்றும் மேனுவல் மற்றும் IVT உடன் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை மட்டுமே இது பெறுகிறது.
ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ.6.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. தற்போதைய தலைமுறை 2020e இல் இந்தியாவில் அறிமுகமான பிறகு ஹேட்ச்பேக் அதன் முதல் பெரிய அப்டேட்டை பெறுகிறது. காருக்கான டெலிவரிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. வேரியன்ட் வாரியான விலைகள் பின்வருமாறு:
விலை விவரங்கள்
டிரான்ஸ்மிஷன் |
எரா |
மங்கா |
ஸ்போர்ட்ஸ் |
ஆஸ்டா |
ஆஸ்டா (O) |
MT |
ரூ.6.99 லட்சம் |
ரூ.7.77 லட்சம் |
ரூ.8.33 லட்சம் |
ரூ.9.30 லட்சம் |
ரூ.9.98 லட்சம் |
IVT |
- |
- |
ரூ.9.34 லட்சம் |
- |
ரூ.11.01 லட்சம் |
ஹூண்டாய் i20 -யின் ஆரம்ப விலை தற்போது குறைந்துள்ளது, புதிய பேஸ்-ஸ்பெக் எரா வேரியன்ட்டுக்கு அதற்காக நன்றி. மேலும் இனிமேல் டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் இல்லாததால், டாப்-எண்ட் விலையும் குறைந்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட ஸ்டைலிங்
காரில் உள்ள தோற்ற மாற்றங்கள் நுட்பமானவை என்றாலும், இன்னும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் இருக்கின்றன . கேஸ்கேடிங் கிரில் வடிவமைப்பு மற்றும் LED ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் LED DRL -கள் இன்னும் இன்வெர்ட்டாகவே உள்ளன. ஃபாக் லேம்ப்கள் கொடுக்கப்படவில்லை, ஆனால் ஏர் டேம் வடிவமைப்பு லேசாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரேஸிங் ஸ்கிர்ட்ஸ் போல தோற்றமளிக்கும் புதிய வடிவிலான பம்ப்பர்கள் முன் தோற்றத்தை ஆக்கிரமிக்கின்றன.
புதிய 16-இன்ச் அலாய் வீல்கள் காரணமாக i20 ஃபேஸ்லிஃப்ட் பக்கத்திலிருந்து சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. பின்புற பக்கம் புதிய வடிவிலான பம்பருடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதே Z- வடிவ LED டெயில் விளக்குகளே இருக்கின்றன.
இன்டீரியரில் நுட்பமான மாற்றங்கள்
இன்டீரியர் ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய மாடலை போலவே தோற்றமளிக்கிறது, புதிய டூயல்-டோன் பிளாக் அண்ட் கிரே இன்டீரியர் இருக்கிறது, இது முழுக்க முழுக்க பிளாக் தீமுக்குப் பதிலாக கொடுக்கப்பட்டுள்ளது. லெதரெட் இருக்கைகள் செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரிக்காக மாற்றப்பட்டுள்ளன, ஆனால் டோர் டிரிம்களில் மென்மையான சாஃப்ட் டச் மெட்டீரியல் இன்னும் உள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சில வசதிகள்
i20 ஃபேஸ்லிஃப்ட் கூடுதலாக ஒரு வசதியை பெறுகிறது - USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர எலக்ட்ரிக் சன்ரூஃப், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டலைஸ்டு டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகிய வசதிகள் இந்த காரில் தொடர்ந்து கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
i20 ஃபேஸ்லிஃப்ட் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ், ESC, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டே-நைட் IRVM, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. ஹையர் வேரியன்ட்களில் பின்புற பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள் உள்ளன.
அப்டேட் செய்யப்பட்ட பவர்டிரெய்ன்
வழக்கமான i20 ஆனது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இனிமேல் கிடையாது என்பதால், இங்குள்ள மிகப்பெரிய மாற்றம் உண்மையில் பிரீமியம் ஹேட்ச்பேக் டவுன்ட்கிரேட் ஆகியுள்ளது. ஹேட்ச்பேக்கை இயக்குவது இப்போது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே, இது 83PS மற்றும் 115Nm அவுட்புட்டை வழங்கிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும், மற்றொன்று பவர் அவுட்புட்டை 88PS ஆக உயர்த்துகிறது.
டர்போ-பெட்ரோல் N லைன் வேரியன்ட்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும், விரைவில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் இதற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்கள்
டாடா ஆல்ட்ரோஸ்,மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார்களுக்கு போன்றவற்றுக்கு போட்டியாக ஹூண்டாய் i20 தொடர்கிறது.
மேலும் படிக்க: ஹூண்டாய் i20 ஆன் ரோடு விலை