XC90 R-டிசைனை வோல்வோ அறிமுகம் செய்தது
published on நவ 30, 2015 03:54 pm by raunak for வோல்வோ எக்ஸ்சி 90
- 36 Views
- ஒரு கருத ்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
தற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ள வோல்வோ நிறுவனத்தின் XC90-ன் இரண்டாம் தலைமுறை வாகனத்தை, ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட பதிப்பாக, XC90 R-டிசைன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே D5 டீசல், T6 பெட்ரோல் டிரைவ்-E என்ஜின்கள் மற்றும் உயர்தர T8 ட்வின் என்ஜின் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைபிரிடு ஆகியவற்றை கொண்ட R-டிசைன் பதிப்புகள் காணப்படுகிறது. இங்கிலாந்தில் XC90 R-டிசைனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை £49,785 (சுமார் ரூ.50 லட்சம்) என்று தொடங்குகிறது. மேலும் XC90-யின் போல்ஸ்டார் பதிப்பையும் வோல்வோ நிறுவனம் அறிமுகம் செய்ய போவதாகவும், அதற்காக இந்தாண்டின் துவக்கத்தில், இந்த சுவீடன் நாட்டு வாகன தயாரிப்பாளர் டியூனிங் ஹவுஸை அமைத்துள்ளதாகவும், சில வதந்திகள் பரவியுள்ளன.
இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது குறித்து கூறுகையில், இந்தாண்டின் மே மாதம் ரூ.64.9 லட்சம் விலை நிர்ணயத்தில், XC90-ன் இரண்டாம் தலைமுறையை, வோல்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த வாகனத்தில் டீசல் என்ஜின் தேர்வு மட்டுமே கிடைக்கிறது. இங்கிலாந்தில் தற்போது கிடைக்கும் R-டிசைன் பதிப்பில் உள்ள அதே D5 என்ஜின் தான் இதிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை பொறுத்த வரை, XC90 மூலம் நம் நாட்டில் ஒரு சிறப்பான துவக்கம் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது, V40 ஹேட்ச்சில் மட்டுமே இந்த R-டிசைன் அளிக்கப்படுவதால், வோல்வோ நிறுவனம் மூலம் இந்தியாவிற்கு XC90 R-டிசைன் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அடுத்தாண்டு வோல்வோ இந்தியா மூலம் போல்ஸ்டார் பிராண்ட், இந்தியாவிற்கு கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
XC90 R-டிசைனில் காணப்படும் புதிய சேர்ப்புகளை குறித்து பார்த்தால், வெளிப்புறத்தை அடையாளம் காட்டும் 20-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள், சில்வர்-எஃப்பர்ட் டோர் மிரர்கள், கிளொஸ் பிளாக் மேஷ் முன்புற கிரில் மற்றும் நிறமேற்றப்பட்ட பின்புற விண்டோக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உட்புறத்தில் லேதர் / நுபக் ஸ்போர்ட்ஸ் சீட்கள், ஒரு 12.3-இன்ச் ஆக்டிவ் TFT டிரைவருக்கான இன்ஃபோர்மேஷன் டிஸ்ப்ளே மற்றும் ஒரு துளைகள் கொண்ட லேதரால் ஆன ட்ரிம் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல் உடன் கியர்ஷிஃப்ட் பெடல்களோடு முழுமை அடைகிறது. R-டிசைன் XC90-ல், ஒரு மெம்மரி அமைப்புடன் கூடிய பவர்டு முன்பக்க சீட், ஸ்போர்ட்ஸ் பெடல்கள், கருப்பு ஹெட்லைன்னிங் மற்றும் மேம்பட்ட உட்புற அமைப்பு லைட்டிங் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் ஒரு எக்ஸ்க்லூசீவ் R-டிசைன் லேதர்-கிளாட் ரிமோட் கீ ஃபோப்-பும் காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்