Kia Syros அறிமுகத் தேதி முடிவுசெய்யப்பட்டது, விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
published on டிசம்பர் 02, 2024 04:26 pm by rohit for க்யா syros
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா சைரோஸ் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் கியாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவிகளுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கியா தனது புதிய மற்றும் வரவிருக்கும் எஸ்யூவியை நவம்பர் மாத தொடக்கத்தில் டீசரை வெளியிட்டது. அந்த டீசரில் காணப்பட்டது கியா சைரோஸ் தான் என்போது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இந்த மாடல், இந்தியாவில் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகமாகிறது. இது கியாவின் இந்திய வரம்பில் சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவிகளுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் கியா எஸ்யூவி பற்றி இதுவரை நாம் அறிந்தவை இதோ:
கியா சைரோஸ் டிசைன்
முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட டீஸர்களில் இருந்து, கியா சைரோஸ் செங்குத்தாக அடுக்கப்பட்ட 3-பாட் LED ஹெட்லைட்கள் மற்றும் நீண்ட LED DRL-களைக் காட்டுகிறது. டிசைன் சிறப்பம்சங்களில் பெரிய விண்டோ பேனல்கள், சி-பில்லர் அருகே விண்டோ பெல்ட்லைனில் ஒரு தனித்துவமான கின்க், பிளார்ட் வீல் ஆர்சகள், ஒரு முக்கிய ஷோல்டர் லைன் மற்றும் ஃப்ளஷ்-பொருத்தப்பட்ட டோர் ஹேன்டில்கள் ஆகியவை அடங்கும். கூடுதல் வெளிப்புற கூறுகளில் நீளமான ரூஃப் ரெயில்கள், எல்-வடிவ டெயில் லைட்கள் மற்றும் நிமிர்ந்த டெயில்கேட் ஆகியவை அடங்கும், இது அதன் சிறந்த மற்றும் நவீன தோற்றத்தை மேம்படுத்துகிறது.
மேலும் பார்க்க: Honda Amaze காரின் ஸ்பை புகைப்படங்கள்
கியா சைரோஸ் கேபின் மற்றும் அம்சங்கள்
கியா இன்னும் சைரோஸின் கேபினை பற்றிய டீசரை வெளியிடவில்லை என்றாலும், இது சோனெட் மற்றும் செல்டோஸின் உட்புறங்களுடன் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைரோஸ் டூயல்-டோன் உட்புற தீமைக் கொண்டிருக்கும், மேலும் ஆன்லைனில் பரவும் சில ஸ்பை ஷாட்கள் 2-ஸ்போக் ஸ்டீயரிங் சேர்க்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.
சைரோஸ் ஆனது சோனெட் மற்றும் செல்டோஸ் போன்ற டூயல் டிஸ்ப்ளே செட்-அப், ஆட்டோ ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் காற்றோட்டமான முன் சீட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த வரை, இதில் ஆறு ஏர்பேக்குகள் (தரநிலையாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சைரோஸ் பவர்டிரெயின்
இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், சைரோஸ் ஆனது சோனெட் போன்ற இன்ஜின் ஆப்ஷன்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா சோனெட்டின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
விவரக்குறிப்புகள் |
|
|
|
|
83 PS |
120 PS |
116 PS |
|
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீட் MT |
6-ஸ்பீட் iMT*, 7-ஸ்பீட் DCT^ |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் iMT*, 6-ஸ்பீட் AT |
*iMT- இன்ட்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிளட்சுலெஸ் மேனுவல்)
^DCT- டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
கியா சைரோஸின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சிரோஸின் ஆரம்ப விலை ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சைரோஸுக்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாளர்கள் யாரும் இன்றி தனித்து பயணிக்கும்.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.