- + 9நிறங்கள்
- + 38படங்கள்
- shorts
- வீடியோஸ்
ஹூண்டாய் அழகேசர்
change carஹூண்டாய் அழகேசர் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1482 cc - 1493 cc |
பவர் | 114 - 158 பிஹச்பி |
torque | 250 Nm - 253 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 6, 7 |
drive type | fwd |
mileage | 17.5 க்கு 20.4 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- powered முன்புறம் இருக்கைகள்
- 360 degree camera
- adas
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
அழகேசர் சமீபகால மேம்பாடு
ஹூண்டாய் அல்கஸார் பற்றிய சமீபத்திய அப்டேட் என்ன?
செப்டம்பர் 9, 2024 அன்று, ஹூண்டாய் கிரெட்டாவால் ஈர்க்கப்பட்ட வெளிப்புற வடிவமைப்புடன் ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ-டிரைவர் இருக்கைக்கான பாஸ் மோடு ஃபங்ஷன் மற்றும் முன் மற்றும் பின் பயணிகளுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற புதிய வசதிகளையும் இது பெறுகிறது.
ஹூண்டாய் அல்கஸார் காரின் விலை என்ன?
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்கான விலை ரூ.14.99 லட்சத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. டீசல் வேரியன்ட்களின் விலை ரூ.15.99 லட்சம். (அனைத்து விலை விவரங்களும் அறிமுக எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி).
ஹூண்டாய் அல்கஸார் 2024 -ன் அளவுகள் என்ன?
அல்கஸார் கார் என்பது ஹூண்டாய் கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்ட மூன்று வரிசை ஃபேமிலி எஸ்யூவி ஆகும். அளவுகள் பின்வருமாறு:
நீளம்: 4,560 மிமீ
அகலம்: 1,800 மிமீ
உயரம்: 1,710 மிமீ (ரூஃப் ரெயில்கள் உடன்)
வீல்பேஸ்: 2,760 மிமீ
ஹூண்டாய் அல்காஸரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
2024 ஹூண்டாய் அல்கஸார் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
-
எக்ஸிகியூட்டிவ்
-
பிரெஸ்டீஜ்
-
பிளாட்டினம்
-
சிக்னேச்சர்
எக்ஸிகியூட்டிவ் மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்களில் 7-சீட்டர் செட்டப் மட்டுமே கிடைக்கும், மேலும் பிரீமியம் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட்கள் 6- மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களுடன் மட்டுமே வருகின்றன.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் 2024 என்ன வசதிகளை பெறுகிறது?
ஹூண்டாய் கிரெட்டாவை போலவே ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் 2024 ஆனது நிறைய வசதிகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த புதிய ஹூண்டாய் காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று தொடுதிரை மற்றும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்கள் கொண்ட டூயல் ஜோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது.
இது இணை டிரைவர் இருக்கைக்கான பாஸ் மோடு ஃபங்ஷன் செயல்பாடு மற்றும் முன் மற்றும் பின் பயணிகளுக்கு வென்டிலேட்டட் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது. டிரைவருக்கான மெமரி ஃபங்ஷன், வென்டிலேட்டட் 1 -வது மற்றும் 2 -வது வரிசை இருக்கைகள் (பிந்தையது 6 இருக்கைகள் கொண்ட பதிப்பில் மட்டுமே) மற்றும் டம்பல்-டவுன் 2வது வரிசை இருக்கைகளுடன் 8 வே பவர்டு முன் இருக்கைகளையும் பெறுகிறது.
2024 ஹூண்டாய் அல்காஸரின் இன்ஜின் ஆப்ஷன்கள் என்ன?
ஹூண்டாய் அல்கஸார் 2023 காரில் இருந்த அதே இன்ஜின்களுடன் அல்கஸார் ஃபேஸ்லிஃப்டை வழங்குகிறது. இது 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் (160 PS/253 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் (116 PS/250 Nm) யூனிட்களை பெறுகிறது. 6-ஸ்பீடு மேனுவல் இரண்டு யூனிட்களிலும் ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது. டர்போ-பெட்ரோல் இன்ஜின் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷன் உடன் வந்தாலும் டீசல் ஆப்ஷனலான 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறுகிறது.
ஹூண்டாய் அல்கஸரின் மைலேஜ் என்ன?
2024 ஹூண்டாய் அல்காஸரின் மைலேஜ் விவரங்கள் இதோ:
-
6-ஸ்பீடு மேனுவல் கொண்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: 17.5 கிமீ/லி
-
7-வேக DCT உடன் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: 18 கிமீ/லி
-
6-ஸ்பீடு மேனுவல் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்: 20.4 கிமீ/லி
-
6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்: 18.1 கிமீ/லி
புதிய அல்கஸார் காரின் மைலேஜ் விவரங்கள் ARAI (இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம்) மூலம் சோதிக்கப்பட்டது.
ஹூண்டாய் அல்கஸார் எவ்வளவு பாதுகாப்பானது?
ஹூண்டாய் அல்கஸார் -ன் பாதுகாப்பு காரணி NCAP (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்) விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் போது தீர்மானிக்கப்படும். பழைய அல்காஸரை அடிப்படையாகக் கொண்ட முன் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா ஆனது குளோபல் NCAP -யால் சோதிக்கப்பட்டது மற்றும் அது 5 ஸ்டார் மதிப்பீட்டில் 3 மதிப்பெண்களைப் பெற்றது.
பாதுகாப்பை பற்றி பேசுகையில் 2024 அல்கஸார் ஆனது அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360-டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது.
ஸ்டாண்டர்டாக புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமாக மூலமாக 2022 -ல் அதன் உடன்பிறப்பான கிரெட்டா பெற்ற மதிப்பெண்களை விட 2024 அல்கஸார் சிறந்த மதிப்பெண்களை பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் அல்கஸார் 8 மோனோடோன் மற்றும் டூயல்-டோன் ஆப்ஷனில் கிடைக்கிறது. டைட்டன் கிரே மேட், ரோபஸ்ட் எமரால்டு மேட் (புதிய), ஸ்டாரி நைட், ரேஞ்சர் காக்கி, ஃபியரி ரெட், அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட் மற்றும் அட்லஸ் ஒயிட் ஆகியவை பிளாக் கலர் ஸ்கீமில் கிடைக்கும்.
நாங்கள் விரும்பது: நாங்கள் குறிப்பாக ரேஞ்சர் காக்கி கலரை விரும்புகிறோம் ஏனெனில் இது எஸ்யூவி -க்கு மிரட்டலான, சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் பிரீமியம் தோற்றத்தையும் கொடுக்கிறது.
நீங்கள் அல்கஸார் ஃபேஸ்லிப்டை 2024 காரை வாங்க வேண்டுமா?
பவர், மதிப்பு மற்றும் வசதிளை ஒருங்கிணைக்கும் மூன்று வரிசை எஸ்யூவியை தேடுகிறீர்களானால் 2024 ஹூண்டாய் அல்கஸார் வலுவான போட்டியாளராக இருக்கும். 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் ஆகிய இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் புதிய அல்கஸார் அற்புதமான செயல்திறனை வழங்குகிறது மேலும் அதன் பிரிவில் தனித்து நிற்கிறது.
அதன் போட்டியாளர்களுக்கு எதிராக போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பணத்திற்கான மதிப்பை கொடுக்கிறது. டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளே, டூயல்-சோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS போன்ற மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் நிரம்பியுள்ளன.
கூடுதலாக ஹூண்டாய் கிரெட்டாவின் பாணியுடன் இணைந்த ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு, நவீன கால எஸ்யூவிகளுடன் தொடர்புடைய தோற்றத்தைக் கொடுக்கும் தோற்றத்தை ஆகியவற்றை இது கொண்டுள்ளது. சக்திவாய்ந்த இன்ஜின்கள், வசதிகள் நிறைந்த கேபின் மற்றும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை நிர்ணயம் ஆகியவற்றால் அல்காஸார் ஃபேஸ்லிஃப்டை அதன் பிரிவில் கட்டாயமாக பரிசீலனையில் வைக்க வேண்டிய ஒரு காராக மாறுகிறது.
இந்த காருக்கான மாற்று என்ன?
2024 ஹூண்டாய் அல்கஸார் MG ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா XUV700 -ன் 6/7-சீட்டர் வேரியன்ட்களுடன் போட்டியிடுகிறது. கூடுதலாக இது கியா கேரன்ஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற MPV -களுக்கு போட்டியாகவும் இருக்கும்.
அழகேசர் எக்ஸிக்யூட்டீவ்(பேஸ் மாடல்)1482 cc, மேனுவல், பெட்ரோல ், 17.5 கேஎம்பிஎல்2 months waiting | Rs.14.99 லட்சம்* | ||
அழகேசர் எக்ஸிக்யூட்டீவ் matte1482 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.14 லட்சம்* | ||
அழகேசர் எக்ஸிக்யூட்டீவ் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்2 months waiting | Rs.15.99 லட்சம்* | ||
அழகேசர் எக்ஸிக்யூட்டீவ் matte டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்2 months waiting | Rs.16.14 லட்சம்* | ||
அழகேசர் பிரஸ்டீஜ்1482 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.18 லட்சம்* | ||
அழகேசர் பிரஸ்டீஜ் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.18 லட்சம்* | ||
அழகேசர் பிரஸ்டீஜ் matte1482 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.33 லட்சம்* | ||
அழகேசர் பிரஸ்டீஜ் matte டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்2 months waiting | Rs.17.33 லட்சம்* | ||
அழகேசர் பிளாட்டினம்1482 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்2 months waiting | Rs.19.46 லட்சம்* | ||
அழகேசர் பிளாட்டினம் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்2 months waiting | Rs.19.46 லட்சம்* | ||
அழகேசர் பிளாட்டினம் matte dt1482 cc, மேனுவல், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்2 months waiting | Rs.19.61 லட்சம்* | ||