• English
  • Login / Register
  • ஸ்கோடா ஸ்லாவியா முன்புறம் left side image
  • ஸ்கோடா ஸ்லாவியா grille image
1/2
  • Skoda Slavia
    + 7நிறங்கள்
  • Skoda Slavia
    + 22படங்கள்
  • Skoda Slavia
  • 1 shorts
    shorts
  • Skoda Slavia
    வீடியோஸ்

ஸ்கோடா ஸ்லாவியா

4.3288 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.10.69 - 18.69 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer
Get Benefits of Upto ₹1.2 Lakh. Hurry up! Offer ending.

ஸ்கோடா ஸ்லாவியா இன் முக்கிய அம்சங்கள்

engine999 cc - 1498 cc
பவர்114 - 147.51 பிஹச்பி
torque178 Nm - 250 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage18.73 க்கு 20.32 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • android auto/apple carplay
  • tyre pressure monitor
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • advanced internet பிட்டுறேஸ்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • wireless charger
  • சன்ரூப்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

ஸ்லாவியா சமீபகால மேம்பாடு

ஸ்கோடா ஸ்லாவியாவின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஸ்கோடா ஸ்லாவியாவின் புதிய மான்டே கார்லோ மற்றும் ஸ்போர்ட்லைன் டிரிம்கள் சில புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளன. ஸ்லாவியா மான்டே கார்லோ டாப்-ஸ்பெக் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் விலை ரூ.15.79 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம் வரை இருக்கும். ஸ்போர்ட்லைன் வேரியன்ட் விலை ரூ. 14.05 லட்சம் முதல் ரூ. 16.75 லட்சம் மற்றும் மிட்-ஸ்பெக் சிக்னேச்சர் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. (விலை விவரங்கள் அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)

ஸ்லாவியா விலை எவ்வளவு?

ஸ்கோடா ஸ்லாவியாவின் விலை ரூ. 10.69 லட்சத்தில் இருந்து ரூ. 18.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை விலை உள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியாவில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

2024 ஸ்கோடா ஸ்லாவியா கிளாசிக், சிக்னேச்சர் மற்றும் பிரெஸ்டீஜ் என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியன்ட் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்னேச்சர் மற்றும் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் என இரண்டு பெட்ரோல் இன்ஜின்களின் ஆப்ஷனை வழங்குகின்றன. பெரிய டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

ஸ்கோடா ஸ்லாவியா மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது, மிட்-ஸ்பெக் வேரியன்ட் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க விருப்பமாகும். இந்த வேரியன்ட் இன்ஜின் தேர்வுகள் மற்றும் மேனுவல் ஒன்றுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 60:40 ஸ்பிளிட் ரியர் சீட்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகின்றன.

ஸ்லாவியா என்ன வசதிகள் உடன் வருகிறது ? 

ஸ்கோடா ஸ்லாவியாவில் கிடைக்கும் அம்சங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்தது ஆகும். இங்கே சில ஹைலைட்ஸ்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் 10-இன்ச் டச்ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில் மட்டும்), 8 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப் வூஃபர், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமெட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப். இது இயங்கும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் மற்றும் முன் இருக்கைகளில் வென்டிலேட்டட் ஃபங்ஷனையும் கொண்டுள்ளது. 

எவ்வளவு அகலமானது? 

ஸ்கோடாவின் செடான் ஐந்து பெரியவர்களுக்கு நன்கு பொருத்தப்பட்ட இருக்கைகளை வழங்குகிறது, பெரும்பாலான பயணிகளுக்கு போதுமான லெக் ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளது. பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, இது 521 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன் வருகிறது, இதில் வார இறுதி பயணத்திற்கு லக்கேஜ்களை எளிதாக வைக்கலாம். பின்புற இருக்கைகள் ஒரு சென்ட்ரல் ஹேண்டில் மற்றும் 60:40 ஸ்பிளிட் ஃபங்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, நீங்கள் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் போது பூட் இடத்தை 1050 லிட்டர் வரை அதிகரித்துக் கொள்ள இது உதவும். 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

ஸ்கோடா ஸ்லாவியா இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது:

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டின் ஆப்ஷன் உடன் 115 PS மற்றும் 178 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கிறது.  

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (DCT) ஆப்ஷன் உடன் 150 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.  

ஸ்கோடா ஸ்லாவியாவின் மைலேஜ் என்ன?

2024 ஸ்லாவியாவின் கிளைம்டு ரேஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனின் அடிப்படையில் வேறுபடும். இங்கே ஒரு சுருக்கமான விவரம்:

  • 1 லிட்டர் MT: 20.32 கி.மீ/லி   

  • 1-லிட்டர் AT: 18.73 கி.மீ/லி  

  • 1.5 லிட்டர் MT: 19 கி.மீ/லி  

  • 1.5 லிட்டர் DCT: 19.36 கி.மீ/லி  

ஸ்கோடா ஸ்லாவியா எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்பை பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஒரு ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இது குளோபல் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்டது மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின் அடிப்படையில் முழுமையான 5 நட்சத்திரங்களைப் பெற்றது.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

ஸ்கோடா 6 மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் கலர்களில் ஸ்லாவியாவை விற்பனை செய்கிறது: லாவா புளூ, கிரிஸ்டல் ப்ளூ, டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கிரிஸ்டல் ப்ளூ வித் கார்பன் ஸ்டீல், மற்றும் ப்ரில்லியண்ட் சில்வர் வித் கார்பன் ஸ்டீல் ரூஃப். எலிகன்ஸ் எடிஷன் பிரத்யேக டீப் பிளாக் கலர் ஸ்கீமில் கிடைக்கிறது. 

நாங்கள் விரும்புவது: ஸ்லாவியாவின் கிரிஸ்டல் ப்ளூ நிறம் மிகவும் நேர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல் அதற்கு சிறப்பான சாலை தோற்றத்தை கொடுக்கிறது.

நீங்கள் 2024 ஸ்கோடா குஷாக்கை வாங்க வேண்டுமா?

ஸ்கோடா ஸ்லாவியா ஒரு நல்ல அளவு கொண்ட பூட் ஸ்பேஸ் மற்றும் நான்கு பயணிகளுக்கு ஏற்ற பயணிகள் இடத்தை கொண்டுள்ளது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் உடன் நீங்கள் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களை வாங்கினால் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் நீண்ட தூர வசதி, மேம்பட்ட வசதிகள் மற்றும் நான்கு பயணிகளுக்கான விசாலமான அறைக்கு முன்னுரிமை அளித்தால், ஸ்லாவியா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

குஷாக்கிற்கான மாற்று கார்கள் என்ன?

ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, மற்றும் ஃபோக்ஸ்வேகன் விட்டஸ் உடன் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடுகிறது

மேலும் படிக்க
ஸ்லாவியா 1.0l கிளாஸிக்(பேஸ் மாடல்)999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waitingRs.10.69 லட்சம்*
மேல் விற்பனை
ஸ்லாவியா 1.0l சிக்னேச்சர்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waiting
Rs.13.99 லட்சம்*
ஸ்லாவியா 1.0l ஸ்போர்ட்லைன்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waitingRs.14.05 லட்சம்*
ஸ்லாவியா 1.0l சிக்னேச்சர்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waitingRs.15.09 லட்சம்*
ஸ்லாவியா 1.0l ஸ்போர்ட்லைன் ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waitingRs.15.15 லட்சம்*
ஸ்லாவியா 1.0l monte carlo999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waitingRs.15.79 லட்சம்*
ஸ்லாவியா 1.0l பிரஸ்டீஜ்999 cc, மேனுவல், பெட்ரோல், 20.32 கேஎம்பிஎல்2 months waitingRs.15.99 லட்சம்*
ஸ்லாவியா 1.5l சிக்னேச்சர் dsg1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waitingRs.16.69 லட்சம்*
ஸ்லாவியா 1.5l ஸ்போர்ட்லைன் dsg1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waitingRs.16.75 லட்சம்*
ஸ்லாவியா 1.0l monte carlo ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waitingRs.16.89 லட்சம்*
ஸ்லாவியா 1.0l பிரஸ்டீஜ் ஏடி999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.73 கேஎம்பிஎல்2 months waitingRs.17.09 லட்சம்*
ஸ்லாவியா 1.5l monte carlo dsg1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waitingRs.18.49 லட்சம்*
ஸ்லாவியா 1.5l பிரஸ்டீஜ் dsg(top model)1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.36 கேஎம்பிஎல்2 months waitingRs.18.69 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

ஸ்கோடா ஸ்லாவியா comparison with similar cars

ஸ்கோடா ஸ்லாவியா
ஸ்கோடா ஸ்லாவியா
Rs.10.69 - 18.69 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
Rs.11.56 - 19.40 லட்சம்*
ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் வெர்னா
Rs.11.07 - 17.55 லட்சம்*
honda city
ஹோண்டா சிட்டி
Rs.11.82 - 16.55 லட்சம்*
ஸ்கோடா குஷாக்
ஸ்கோடா குஷாக்
Rs.10.89 - 18.79 லட்சம்*
மாருதி சியஸ்
மாருதி சியஸ்
Rs.9.40 - 12.29 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
டாடா கர்வ்
டாடா கர்வ்
Rs.10 - 19 லட்சம்*
Rating4.3288 மதிப்பீடுகள்Rating4.5358 மதிப்பீடுகள்Rating4.6517 மதிப்பீடுகள்Rating4.3181 மதிப்பீடுகள்Rating4.3437 மதிப்பீடுகள்Rating4.5727 மதிப்பீடுகள்Rating4.6339 மதிப்பீடுகள்Rating4.7325 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine999 cc - 1498 ccEngine999 cc - 1498 ccEngine1482 cc - 1497 ccEngine1498 ccEngine999 cc - 1498 ccEngine1462 ccEngine1482 cc - 1497 ccEngine1199 cc - 1497 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power114 - 147.51 பிஹச்பிPower113.98 - 147.51 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower119.35 பிஹச்பிPower114 - 147.51 பிஹச்பிPower103.25 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower116 - 123 பிஹச்பி
Mileage18.73 க்கு 20.32 கேஎம்பிஎல்Mileage18.12 க்கு 20.8 கேஎம்பிஎல்Mileage18.6 க்கு 20.6 கேஎம்பிஎல்Mileage17.8 க்கு 18.4 கேஎம்பிஎல்Mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல்Mileage20.04 க்கு 20.65 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்
Boot Space521 LitresBoot Space-Boot Space528 LitresBoot Space506 LitresBoot Space385 LitresBoot Space510 LitresBoot Space-Boot Space500 Litres
Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags2Airbags6Airbags6
Currently Viewingஸ்லாவியா vs விர்டஸ்ஸ்லாவியா vs வெர்னாஸ்லாவியா vs சிட்டிஸ்லாவியா vs குஷாக்ஸ்லாவியா vs சியஸ்ஸ்லாவியா vs கிரெட்டாஸ்லாவியா vs கர்வ்
space Image

Save 7%-27% on buyin ஜி a used Skoda Slavia **

  • Skoda Slavia 1.0 TS ஐ Ambition AT
    Skoda Slavia 1.0 TS ஐ Ambition AT
    Rs13.50 லட்சம்
    20228,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Rs12.00 லட்சம்
    202332,250 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.5 TS ஐ Style AT BSVI
    Skoda Slavia 1.5 TS ஐ Style AT BSVI
    Rs17.75 லட்சம்
    20232, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Ambition AT
    Skoda Slavia 1.0 TS ஐ Ambition AT
    Rs13.75 லட்சம்
    20239,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Rs11.50 லட்சம்
    202235,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Rs10.25 லட்சம்
    202246,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Skoda Slavia 1.0 TS ஐ Ambition BSVI
    Rs12.90 லட்சம்
    20236,56 7 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Style AT
    Skoda Slavia 1.0 TS ஐ Style AT
    Rs15.50 லட்சம்
    202318,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Style AT BSVI
    Skoda Slavia 1.0 TS ஐ Style AT BSVI
    Rs14.25 லட்சம்
    202238,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Skoda Slavia 1.0 TS ஐ Style AT Lava
    Skoda Slavia 1.0 TS ஐ Style AT Lava
    Rs16.25 லட்சம்
    202310,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

ஸ்கோடா ஸ்லாவியா விமர்சனம்

CarDekho Experts
ஸ்லாவியா மிகச் சிறப்பாகச் செய்திருப்பது என்னவென்றால் சண்டையை மீண்டும் எஸ்யூவி -களுக்குக் கொண்டு செல்வதுதான். இதன் எஸ்யூவி போன்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சவாரி வசதியானது சற்று சாகசமாக ஓட்டினாலும் கவலையின்றி இருக்க வைக்கிறது.

overview

எஸ்யூவி -களுக்கான உங்கள் தேடுதலை இந்த செடான் முடிவுக்கு கொண்டுவருமா ?

skoda slavia review

இந்த வயதில் நீங்கள் ஒரு செடானை தேடிக்கொண்டிருந்தால் நீங்கள் நிச்சயமாக ஒரு சிறிய மற்றும் முக்கிய பார்வையாளர்களின் ஒருவராக இருகிறீர்கள். இப்போது பெரும்பாலும் எஸ்யூவி -களில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதால் செடான்கள் இப்போது பிரபலமில்லாமல் இருக்கின்றன. சியாஸ் இன்னும் ஒரு ஜெனரேஷன் அப்டேட்டை பெறவில்லை, வெர்னா i20 மற்றும் சிட்டியை விட குறைவான அகலம் கொண்டது; கவர்ச்சியாக இருந்தாலும் ஸ்பீட் பிரேக்கர்களில் முன்பக்கம் இடித்துக் கொள்ளும் செடான்களே இங்கே அதிகம். நீண்ட காலமாக இந்தியாவில் ஒரு ஆல்ரவுண்டராகும் திறன் கொண்ட செடான் எதுவுமே இல்லை.

ஸ்கோடா ஸ்லாவியா பேப்பரில் பார்க்கப்போனால இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்ற செடானை உருவாக்கியுள்ளதை போல தெரிகின்றது. பவர்புல்லான இன்ஜின் ஆப்ஷன்கள், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், மற்றும் வசதிகள் மற்றும் நடைமுறைத்தன்மையுடன் உள்ளது. இது செடானுக்கான உங்கள் தேடலை முடிவுக்கு கொண்டு வருமா ? அல்லது உங்கள் கவனத்தை மீண்டும் எஸ்யூவி -களுக்கு கொண்டு செல்லுமா ?

வெளி அமைப்பு

skoda slavia review

ஸ்லாவியா சற்று சிறிய ஆக்டேவியா போல தோற்றமளிக்கிறது. இதன் மஸ்குலர் பானட் ஆக்ரோஷமான முன் கிரில் மற்றும் ஸ்போர்ட்டி பம்பர் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது. LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்களும் அழகாக இருக்கின்றன. ஃபாக் லைட்ஸ் சிறந்த வெளிச்சத்திற்காக ஹாலோஜன் பல்புகளை பெறுகின்றன. இந்த செடான் 2002 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அசல் ஆக்டேவியாவை விட பெரியது மேலும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது ​​ஸ்லாவியா மிகவும் அகலமானது உயரமானது மற்றும் நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது.

பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது ஆக்டேவியாவுடன் இந்த காருக்கு உள்ள ஒற்றுமை மிகவும் தெளிவாக தெரிகிறது. பெரிய கண்ணாடி பகுதி வலுவான ஷோல்டர் லைன் மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய 16-இன்ச் அலாய் வீல்கள் உயர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை இதில் உள்ளன. வீல்களை பற்றி பேசுகையில் அவர்களுக்கு 17 இன்ச் கொடுக்கப்படவில்லை என்று சில விவாதங்கள் எழுந்தாலும், என்னைப் பொறுத்தவரை 16 பேர் நிச்சயமாக சிறந்த தேர்வு. இந்த டூயல் டோன் வீல்கள் அழகாக இருக்கின்றன. இவை பக்கச்சுவர் சாலைகளில் இருந்து கிடைக்கும் கடுமையான தாக்குதல்களில் இருந்து விளிம்புகளையும் பயணிகளையும் பாதுகாக்கிறது - நிச்சயமாக இது சிறப்பான ஒன்று.

பின்புறத்தில் வடிவமைப்பு நுட்பமானது. டெயில் லேம்ப்கள் LED ஹைலைட்ஸை கொண்டுள்ளன. மேலும் ஸ்கோடா எழுத்துகள் சற்று பிரீமியமாக தோற்றமளிக்கின்றன. மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெளிப்புறம் முழுவதும் இன்ஜின் அல்லது வேரியன்ட் தொடர்பான எந்தவித பேட்ஜிங்கும் இல்லை. இருப்பினும் ஹூட்டின் கீழ் உள்ள இன்ஜின் என்ன என்பதை அறிய விரும்பினால் 1.0-லிட்டர் அல்லது பெரிய 1.5-லிட்டர் பின்புற பம்பரின் கீழ் பார்க்க வேண்டியிருக்கும். பெரிய இன்ஜின் டூயல்-டிப் எக்ஸாஸ்ட்டை பெறுகிறது. அதே நேரத்தில் சிறியது வேரியன்ட் சிங்கிள் டிப் எக்ஸாஸ்ட்டையே கொண்டுள்ளது. ஸ்கோடா பம்பர் வரை நீட்டிக்கும் பளபளப்பான எக்ஸாஸ்ட் டிப்ஸை வைக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமளிக்கும் விஷயம். பெரிய இன்ஜினைக் குறிக்க சில நுட்பமான பேட்ஜிங் கொடுக்கப்பட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஒட்டுமொத்தமாக ஸ்லாவியா ஒரு ஈர்க்கக்கூடிய தோற்றத்தை பெறுகிறது. முன்பக்கமானது தோற்றத்தில் சில முரட்டுத்தனமான தோற்றத்தை காருக்கு கொடுக்கின்றது.

உள்ளமைப்பு

skoda slavia review

உட்புறத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று சிறப்பாக உள்ளது மற்றொன்று அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நன்கு செயல்படுத்தப்பட்ட பகுதியானது வடிவமைப்பு ஆகும். பளபளப்பான பிளாக் பேனல்கள் மற்றும் பக்கவாட்டு ஏசி வென்ட்களுக்குள் புரோன்ஸ் நிற ஸ்ட்ரிப் உடன் டேஷ்போர்டு நன்றாக இருக்கிறது. வெவ்வேறு லேயர்கள் மற்றும் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இருந்தபோதிலும் மினிமலிஸ்ட் தன்மையை பிரதிபலிக்கும் விதத்திலேயே உள்ளது. ஸ்டீயரிங் இரண்டு ஸ்போக்குகளுடன் அதே போல அமைப்பை பின்பற்றுகிறது. மேலும் குரோமின் நுட்பமான பயன்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் கியர் ஷிஃப்டர் மற்றும் லெதரெட் இருக்கைகள் போன்ற டச் பாயிண்ட்களும் பிரீமியமான உணர்வை தருகின்றன.

கேபினின் தரம் மற்றும் ஃபிட் பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. பெரும்பாலும் கடினமான பிளாஸ்டிக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன அதேசமயம் ஹோண்டா சிட்டி போன்ற கார்களில் உள்ளபடி மென்மையான மற்றும் பிரீமியம் ஃபீலை வழங்குகின்றன. மேலும் பேனல்கள் குறிப்பாக புரோன்ஸ் ஸ்ட்ரிப் மற்றும் ஏசி வென்ட் ஹவுசிங் ஆகியவை குறைந்த தரம் கொண்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. இவை சற்று அழுத்தினாலே வளையக்கூடியவை, அவை க்ரீக் சத்தத்தை எழுப்புகின்றன. ரூஃப் லைனர் மெலிதாக இருக்கிறது மற்றும் கேபின் லைட் பட்டன்கள் செயல்பாட்டில் மென்மையாக இருந்திருக்க வேண்டும். மேலும் இது ஒரு நிட்பிக்காக இருக்கலாம். ரூ.16 லட்சம் காரில் சாஃப்ட் ஃபோல்டிங் கிராப் ஹேண்டில்கள் ஏன் இல்லை?. வாடிக்கையாளர்கள் இந்த பிராண்டிலிருந்து அத்தகைய தரத்தை எதிர்பார்க்காததால் ஸ்கோடா உண்மையில் இவற்றைச் சரிசெய்திருக்க வேண்டும்.

வசதிகள்

skoda slavia review

கேபின் அனுபவத்தைப் போலல்லாமல் இது ஒரு கலவையான வசதிகளால் நிரம்பியுள்ளது. டிரைவருக்கு ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட், மேனுவல் சீட்-ஹெயிட் அட்ஜஸ்ட்மென்ட், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் என்ட்ரி மற்றும் இறுதியாக டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை குஷாக்கில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளாகும். இது டகுன் காரின் அதே யூனிட் மற்றும் மூன்று அமைப்புகளில் முழுமையாக கஸ்டமைஸ் செய்து கொள்ளக்கூடியது. ஸ்கிரீனில் விரும்பிய தகவலைப் பெற உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. இருப்பினும் அதன் மஞ்சள் நிறத்தை மாற்ற முடியாது. மேலும் குறைந்தபட்சம் 1.0 மற்றும் 1.5 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்களுக்கு இடையிலாவது கொஞ்சம் வித்தியாசமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்ஃபோடெயின்மென்ட்டை பொறுத்தவரை சிறப்பான 10-இன்ச் ஸ்கிரீன் இண்டர்ஃபேஸ் உடன் உள்ளது. இது கானா மற்றும் பிபிசி செய்திகள் போன்ற ஆப்களையும் கொண்டுள்ளது இது செயல்பட ஹாட்ஸ்பாட் இணைப்பு தேவைப்படும். மேப் வசதியும் ஆஃப்லைனில் உள்ளன. மேலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிக்கல்கள் இசை பின்னணி சிக்கல் உள்ளது (ஒரே நேரத்தில் இரண்டு டிராக்குகள் சேர்ந்து ஒலிக்கின்றன. மற்றும் காரின் இக்னிஷன் ஆஃப் செய்யப்படும் போது ஃபோனின் ஸ்பீக்கர்களில் இசை ஒலிக்க தொடங்குகிறது) வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே திட்டமிட்டபடி செயல்படுகிறது. இது வயர்லெஸ் சார்ஜருடன் இணைந்து மிகவும் வசதியான தினசரி செட்டப்பை உருவாக்குகிறது. சிறப்பான 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமும் ஒரு பன்ச்சியான பேஸ் உடன் வருகிறது ஆம்ப்ஃளிபையர் மற்றும் பூட்-மவுண்டட் ஸ்பீக்கரால் இது சாத்தியமாகியுள்ளது.

skoda slavia review

கிரியேச்சர் வசதிகள் மற்றும் கேபின் நடைமுறைத்தன்மை ஆகியவை ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வென்டிலேட்டட் சீட்கள் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் மூலம் நன்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங் பேட் புத்திசாலித்தனமாக ஸ்டோரேஜில் உள்ள இடத்தை எடுத்துக் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டிரைவர் பக்க பாக்கெட்டின் கீழ் அதிக ஸ்டோரேஜ் கிடைக்கும். இருப்பினும் க்ளோப் பாக்ஸ் சற்று பெரியதாக இருந்திருக்கலாம் இருப்பினும் கூலிங்காகவே உள்ளது. ஒரு 12V சாக்கெட் கொண்ட டைப்-சி சார்ஜிங் ஆப்ஷன்கள் கேபினில் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள் ISOFIX இருக்கை நங்கூரங்கள் ஹில் ஹோல்ட் மல்டி கொலிஷன் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் வார்னிங் சிஸ்டம் போன்ற தரமான ESP உடன் ஒரு நல்ல பாதுகாப்புக்கான தொகுப்பை ஸ்லாவியா கொண்டுள்ளது.

பின் இருக்கைகள்

skoda slavia review

ஒரு செடானுக்கு பின் இருக்கை வசதி மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒருவர் இந்த வகை காரில் பயணிக்கும் போது கார் அவரை மிகவும் வசதியாக உணர வைக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஸ்லாவியா ஏமாற்றவில்லை. இருக்கையின் அடித்தளம் பெரியதாகவும் நன்கு வடிவமைக்கப்பட்டதாகவும் உள்ளது. மேலும் இருக்கை பின்புறமும் நன்றாகவே உள்ளது. இது தொடையின் கீழ் மற்றும் தோள்பட்டை உட்பட முழு உடலுக்கும் நல்ல சப்போர்ட்டையே  வழங்குகிறது. ரிக்ளைன் ஆங்கிள் சரியாக உள்ளது நீண்ட பயணங்கள் இந்த இருக்கையில் வசதியாக இருக்கும். நல்ல முழங்கால் கால் மற்றும் தலை அறையுடன் இடமும் தாராளமாக உள்ளது. பெரிய ஜன்னல்கள் மற்றும் பின்புற கால் கண்ணாடி லைட் ரூஃப் லைனர் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றிற்கு நன்றி ஒரு பெரிய கண்ணாடி பகுதியுடன் சாலையின் ஒட்டுமொத்த பார்வை நிலை நன்றாக உள்ளது.

இருப்பினும் பின்பக்கம் அதிகபட்சம் மூன்று நபர்களுக்கானது. இருக்கைகளின் வலுவான விளிம்பு மற்றும் கேபினின் வரையறுக்கப்பட்ட அகலம் ஆகியவற்றால் மூன்று பயணிகள் அமரும் போது ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும்படியான நிலைமை ஏற்படுகின்றது. இதனால் தோள்கள் முழுமையாக ஒன்றுடன் இடிக்கின்றன. மேலும் அது வசதியாக இல்லை. அதுவே நீங்கள் 2 பேர் மட்டுமே அமரும் போது இந்த இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். அப்போதுதான் கப்ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் போன்ற வசதிகளை நீங்கள் பயன்படுத்த முடியும். இது டோர் ஆர்ம்ரெஸ்ட் இரண்டு டைப்-சி போர்ட்கள் பின்புற ரீடிங் லைட்களுடன் (இதிலும் தர சிக்கல் இதில் உள்ளது) பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் மொபைல் பாக்கெட்டுகள் உள்ளன. ஆனால் ஸ்கோடா கூடுதலாக விண்டோ ஷேடுகளையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு பின்புற விண்ட்ஸ்கிரீன் சன்ஷேடையோ கூட கொடுத்திருக்கலாம்.

பாதுகாப்பு

இந்த காரில் இடம் பெறப்போகும் பாதுகாப்பு வசதிகளின் பட்டியல் வெளியாகவில்லை. ஆனால் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 6 ஏர்பேக்குகள் இருக்கும். பாதுகாப்பு விஷயத்தில் ஸ்கோடா இந்தியாவின் சோதனை விதிமுறைகள் மட்டுமல்ல, உலகளாவிய NCAP -ன் தேவைகளுக்கும் அப்பாற்பட்டும் சிறந்ததாக இருக்கும் என ஸ்கோடா கூறுகின்றது. 64 கிமீ/மணி முன் டிஃபார்மபிள் கிராஷ் டெஸ்ட் தவிர ஸ்லாவியா ஐரோப்பிய தரத்திற்கு அமைக்கப்பட்ட பாதசாரி பாதுகாப்பு இணக்கத்துடன் கூடிய சைடு போல் கிராஷ் டெஸ்ட்டில் வெற்றி பெற்றுள்ளது.

பூட் ஸ்பேஸ்

skoda slavia review

433 385 மற்றும் 425,  இவை வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ள கிரெட்டா, குஷாக் மற்றும் ஹாரியர் ஆகியவற்றுக்கான பூட் ஸ்பேஸ் விவரங்கள். ஸ்லாவியா - 521 லி பூட் ஸ்பேஸை கொண்டது. அதிக பைகள் மற்றும் ஓவர்நைட்டர்களுக்கு இடமளிக்கும் வேரியன்ட்யில் இது இரண்டு பெரிய சூட்கேஸ்களை எளிதாக எடுத்துக் செல்லலாம். கூடுதலாக பூட் பெரிதாக இருப்பதால் நீங்கள் சூட்கேஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியும் வைக்கலாம். இருப்பினும் லோடிங் லிட் உயரத்தில் இருப்பதால் கனமான சாமான்களை எடுத்துச் வைக்க சற்று கடினமாக இருக்கும்.

செயல்பாடு

skoda slavia review

ஸ்லாவியா 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மற்றும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின்களுடன் கிடைக்கிறது. இரண்டும் பெட்ரோல் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்டவை மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. உங்களில் பெரும்பாலானோர் 1.0 லிட்டர் இன்ஜினை வாங்க விரும்பலாம். எனவே அதிலிருந்தே தொடங்குவோம். இந்த டிரைவிங் டெஸ்ட்டில் 6-ஸ்பீடு AT மாடலை எடுத்தோம்.

ரேபிட் மற்றும் குஷாக்கை நாங்கள் ஒட்டிய போது அதிலிருந்த அதே இன்ஜின் இதுதான். மேலும் இந்த 3 சிலிண்டர் இன்ஜினின் ரீஃபைன்மென்ட் நன்றாகவே உள்ளது. இருப்பினும் ஸ்லாவியாவில் சிறந்த கேபின் இன்சுலேஷன் அதை இன்னும் நன்றாக உணர உதவுகிறது. மற்றொரு முன்னேற்றம் கிரால் செயல்பாடு ஆகும். ரேபிட்டில் தொடக்கத்தில் ஆக்சலரேஷன் சற்று ஆக்ரோஷமாக இருந்தது. மேலும் நீங்கள் டிராஃபிக்கில் இருக்கும் ஒவ்வொரு முறையும் பிரேக்குகளை மிகவும் ஆக்ரோஷமாக அழுத்த வேண்டியிருந்தது. ஆனால் இது குஷாக்கில் சிறப்பாக இருந்தது ஆனால் ஸ்லாவியாவில் முற்றிலுமாக அது தவிர்க்கப்பட்டுள்ளது. இங்கே ஆரம்ப ஆக்சலரேஷன் மென்மையானது மற்றும் நீங்கள் விரும்பும் அளவுக்கு மட்டுமே உள்ளது.

skoda slavia review

நீங்கள் செல்லும்போது ஸ்லாவியாவின் மென்மையான தன்மை தொடர்கிறது. த்ராட்டில் சற்று ஓய்வாக இருக்கின்றது. எனவே ஆக்சலரேஷன் மிகவும் இயல்பான உணர்வை தருகின்றது. இதன் ஒரு குறைபாடு என்னவென்றால் சாலையில் வேகத்தை விரைவாக மாற்ற கொஞ்சம் முயற்சி தேவைப்படும். ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போதுதான் அவசரம் என்பது நினைவுக்கு வருகிகின்றது, டிரான்ஸ்மிஷன் குறைகிறது. வழக்கமான ஓவர்டேக்குகளுக்கு கியரை பிடித்துக் கொண்டு அதன் செக்மென்ட்-லீடிங் டார்க்கை பயன்படுத்தி முன்னேறி செல்லவே கார் விரும்புகிறது.

டார்க் அதிகம் என்பதால் பவர் குறைவானது என்று அர்த்தம் இல்லை. ஆக்சிலரேட்டரை கடினமாக அழுத்தினால் டர்போ-ஜோனில் டிரான்ஸ்மிஷன் இரண்டு நிலைகளில் கீழே செல்லும். ஆகவே ஓவர்டேக்குகள் விரைவாக செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் இன்ஜின் கடினமாக வேலை செய்வதை நீங்கள் கேட்கலாம். டிரான்ஸ்மிஷனை பற்றி பேசுகையில் மாற்றங்கள் இங்கே தடையற்றதாக உணர்வை தருகின்றன. டிரைவை ரிலாக்ஸாக வைத்திருக்க விரைவாக கியரை உயர்த்தும் தன்மை கொண்டது. எனவே நகரத்தில் பயணம் செய்யும் போது ​​3வது, 4வது மற்றும் 5வது கியரை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஸ்லாவியா செயலற்ற இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் ஆகியவற்றையும் பெறுகிறது. இது சீராக செயல்படுவதோடு எரிபொருளையும் சேமிக்க உதவுகிறது. எனவே இங்கு கிளைம் செய்யப்படும் மைலேஜ் குஷாக்கை விட அதிகமாக உள்ளது.

இந்த டிரைவில் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.5-லிட்டர் இன்ஜினையும் பார்த்தோம் ஆனால் அதைப் பற்றி பேச எங்களுக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை. இது மார்ச் 3 ஆம் தேதி இங்கு அப்டேட் செய்யப்படும்.

1.5 லிட்டர் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

Performance

1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் இன்ஜின் இடையே உள்ள வித்தியாசம் நீங்கள் ஸ்டார்ட்டரை அழுத்தும் நேரத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இது மிகவும் மென்மையானது மற்றும் இன்ஜின் நோட் கூட இன்னும் குறைவானதாக உணர்வை தருகின்றது. அதை அப்டேட் செய்தால் மற்றும் ரீஃபைன்மென்ட் செயல்பாட்டுக்கு வரும். நீங்கள் புறப்படும்போது ​​ஸ்லாவியா இந்த மோட்டாருடன் அதிக சிரமமின்றி உணர்கிறது. ஆக்சலரேஷன் சீராகவும் நேராகவும் உள்ளது. மென்மையான பவர் டெலிவரி மற்றும் ரெவ்கள் சிரமமின்றி உள்ளன. இது டிரைவ் அனுபவத்தை மிகவும் நிதானமாகவும் சிரமம் இல்லாமலும் ஆக்குகிறது. நீங்கள் ஓவர்டேக்குகளுக்குச் சென்றாலும் அதைச் செயல்படுத்த குறைந்த த்ராட்டில் இன்புட் மட்டுமே தேவைப்படுகிறது.

Performance

மற்றொரு நன்மை என்னவென்றால் இன்ஜினை ரெட்லைனுக்கு அருகில் தள்ளினாலும் கூட 1.5-லிட்டர் சத்தம் எழுப்புவதில்லை அல்லது அழுத்தமாகவும் உணர வைக்காது. இது அப்டேட் செய்ய விரும்புகிறது மற்றும் அவ்வாறு செய்யும் போது மென்மையாக உணர வைக்கின்றது. இது 1-லிட்டருடன் முரண்படுகிறது இது கடினமாக உழைக்கும் போது சத்தம் மற்றும் அழுத்தத்தை உணர வைக்கின்றது. உங்கள் கால்களை கீழே வைக்க நீங்கள் முடிவு செய்தால் ஸ்லாவியா 1.5 முன்னோக்கி சார்ஜ் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆக்சலரேஷன் வலுவாக உள்ளது மற்றும் ரெவ் சீராக முன்னேறுகிறது. இந்த மேனுவலில் கிளட்ச் இலகுவாகவும் இருக்கின்றது. இது அனுபவத்தை இன்னும் திருப்திகரமாக்குகிறது.

Performance

இன்ஜின் இப்படி இருப்பதால் மைலேஜில் இழப்பு இருக்கலாம் என நினைக்க வேண்டாம். ஏனெனில் கிளைம்டு மைலேஜ் மேனுவல் வேரியன்ட்டுக்கு 18.72 கிமீ/லி மற்றும் ஆட்டோமெட்டிக்கிற்கு 18.41கிமீ/லி ஆக உள்ளது. 1-லிட்டருக்கு மேனுவலில் 19.47கிமீ/லி மற்றும் ஆட்டோமெட்டிக்கில் 18.07கிமீ/லி ஆக உள்ளது. சிலிண்டர் டீஆக்டிவேஷன் தொழில்நுட்பத்தால் இது ஓரளவுக்கு உதவுகிறது. இது எரிபொருளைச் சேமிக்க பயணத்தின் போது இரண்டு சிலிண்டர்களை மூடி விடும். ஓட்டுவதற்கு 1.5 -லிட்டர் ஸ்லாவியா 1-லிட்டரை விட ஒவ்வொரு விஷயத்திலும் சிறந்ததாக சிறந்தது. உற்சாகமாக வாகனம் ஓட்டுவது அல்லது சிரமமில்லாத பயணமாக இருந்தாலும் 1.5 லிட்டர் சிறந்தது.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

skoda slavia review

ஸ்லாவியாவின் சஸ்பென்ஷன் இன்ஜின் டியூன் போன்றது நகரத்திற்கு மிகவும் பொருத்தமானது. இது சலையின் மோசமான மேற்பரப்பை நன்றாக சமாளிக்கின்றது, குறிப்பாக ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் உடைந்த சாலைகள் போன்றவற்றில் செல்லும் போது. இது அந்த மேடுகள் அனைத்தையும் எளிதில் சமாளித்து கேபினை நிலையாக வைத்திருக்கும். பெரிய மேடுகள் உணரப்படலாம் மேலும் சஸ்பென்ஷன் சத்தத்தையும் ஏற்படுத்துகிறது ஆனால் சஸ்பென்ஷன் கடினத்தன்மை என்பதால் அது இவற்றை கவனித்துக் கொள்ளும். நெடுஞ்சாலைகளில் ஸ்லாவியா மிகவும் நிலையானதாக உள்ளது மற்றும் எவ்வளவு தூரம் சென்றாலும் கூட சிரமத்தை ஏற்படுத்துவதில்லை.

ஸ்லாவியாவின் கையாளுமை செயல்பாட்டுக்கு வரும்போது இது மிகவும் சுவாரஸ்யமாகிறது. செடான் நம்பிக்கையுடன் திரும்புகிறது மேலும் பாடி ரோல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. வேகத்தில் ஸ்டீயரிங் எடையை அதிகரிக்கிறது மற்றும் சரியான அளவுக்கான ஃபீட்பேக்கை வழங்குகிறது. திருப்பங்களில் ஆர்வத்துடன் வாகனம் ஓட்டுவதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் ஸ்லாவியா அதற்காக ஒரு கார். எலக்ட்ரானிக் டிஃபெரென்ஷியல் லாக் உள் சக்கரங்களின் வேகத்தை உங்களுக்கு அதிக பிடியை வழங்கும். எனவே நீங்கள் வேகமாகச் செல்லும்போது ​​ஸ்லாவியா விளையாட்டாக உணரத் தொடங்குகிறது. மேலும் அதன் வரிசையை நன்றாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்கும். டயர்களின் சிறந்த உணர்வை பெற ஸ்டீயரிங் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

நாம் விவாதிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் கிரவுண்ட் கிளியரன்ஸ். 179 மிமீ அனுமதியுடன் ஸ்லாவியா கிட்டத்தட்ட எஸ்யூவி -யை போலவே இருக்கின்றது. இது சிட்டியை விட 14 மிமீ அதிகமாகவும் குஷாக்கை விட 9 மிமீ குறைவாகவும் உள்ளது. அளவுகளை தவிர முன் மற்றும் பின்புற ஓவர்ஹாங்க்கள் கூட நன்றாக நிர்வகிக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஸ்லாவியா எங்கள் டிரைவில் ஒரு முறை கூட இடிக்கவிலை. நாங்கள் வேண்டுமென்றே வேகமாகச் சென்று ஸ்பீட் பிரேக்கர்களில் பிரேக் போட்டோம் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. இதை இந்த பிரிவில் வேறு எந்த செடானாலும் செய்ய முடியாத ஒன்று - இது இந்திய சாலைகளில் உங்களுக்கு மன அமைதியைத் தருகிறது.

skoda slavia review

வகைகள்

ஸ்லாவியா மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது - ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல். 1.5 லிட்டர் இன்ஜின் ஸ்டைல் வேரியன்ட் உடன் மட்டுமே கிடைக்கிறது இது 1.0 லிட்டர் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் விருப்பத்தையும் கொண்டிருக்கும். விலையை பொறுத்தவரை (எக்ஸ்-ஷோரூம்) 1.0-லிட்டர் வேரியன்ட்கள் ஹோண்டா சிட்டியுடன் நேருக்கு நேர் செல்கின்றது. அதேசமயம் 1.5-லிட்டர் பிரிவுக்கு மேலே இருக்கும்.

எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்கள் 1 லிட்டர் TSI 1.5 லிட்டர் TSI வேரியன்ட்
ஆக்டிவ் MT ரூ.10.69 லட்சம் - -
ஆம்பிஷன் MT ரூ.12.39 லட்சம் - -
ஆம்பிஷன் AT ரூ.13.59 லட்சம் - -
ஸ்டைல் ​​MT ( சன்ரூஃப் இல்லதது) ரூ.13.59 லட்சம் - -
ஸ்டைல் MT ரூ.13.99 லட்சம் ரூ.16.19 லட்சம் ரூ.2.2 லட்சம்
ஸ்டைல் ​​AT / DSG ரூ.15.39 லட்சம் ரூ.17.79 லட்சம் ரூ.2.4 லட்சம்

வெர்டிக்ட்

Verdict

ஸ்லாவியா இறுதிப் புதிரை விடுவிப்பது விலையாக இருக்கும். இது குஷாக்கை விட சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மார்ச் 2022 -ல் விலை அறிவிக்கப்படும் போது விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கலாம். டோக்கன் தொகையான ரூ.11000 -க்கு தற்போது முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. நீங்கள் ஸ்லாவியாவை முன்பதிவு செய்தற்காக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமா?

உண்மையில்,  ஸ்லாவியாவுடன் ஸ்கோடா செடான்கள் உண்மையிலேயே எவ்வளவு திறன் கொண்டவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு தொகுப்பாக ஸ்லாவியாவில் குறைகள் பெரிதாக எதுவும் இல்லை. டீசல் இன்ஜின் இல்லாததால் சில வாடிக்கையாளர்கள் இதை வாங்க யோசிக்கலாம். சில குறைகஐ தவிர்த்து இது தவிர இது ஒரு விசாலமான நன்றான வசதிகள் கொண்ட ஓட்டுவதற்கு ஃபன் நிறைந்த செடானாகவே தோன்றுகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • ஈர்க்கக்கூடிய சாலை தோற்றம்
  • கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ்
  • கூடுதலான பூட் ஸ்பேஸ்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இன்ட்டீரியரின் தரம்
  • பின் இருக்கையில் மூவருக்கு மட்டுமே இடம் உள்ளது
  • ரிவர்ஸிங் கேமரா குவாலிட்டி
space Image

ஸ்கோடா ஸ்லாவியா கார் செய்திகள்

ஸ்கோடா ஸ்லாவியா பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான288 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (288)
  • Looks (84)
  • Comfort (116)
  • Mileage (53)
  • Engine (75)
  • Interior (68)
  • Space (31)
  • Price (50)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • O
    onik on Jan 14, 2025
    4.3
    Inside The Cars Feel Look
    Inside the cars feel look luxury and classy performance of the car is also good but bad thing about the car I feel that It is lacking the modern features and handling is not also so good it doesn't give that much confidence to the driver for Speeding high
    மேலும் படிக்க
  • K
    k venkata bhargav on Jan 11, 2025
    4.8
    Pocket Rocket. Worth For Each And Every Penny.
    Perfect vehicle in this current generation for auto enthusiasts. Good performance, drivability, safety, styling, comfort. The only problem is meilage in city 8-10. Meilage is highways is good. Worth for each and every penny and it is a small AUDI car with 1.L engine.
    மேலும் படிக்க
    1
  • P
    prashant on Jan 03, 2025
    4.2
    Slavia Review
    Excellent car in terms of performance and handling but lacks some essential features like cornering foglights and speaker at rear door on base model as its sibling virtus offers it
    மேலும் படிக்க
  • S
    shivam sarkar on Jan 01, 2025
    4.5
    A Perfect Blend Of Style And Performance
    The Skoda Slavia impresses with its premium design, spacious interiors, and smooth performance. Excellent ride quality, fuel efficiency, and advanced features make it a superb choice for sedan enthusiasts. Highly recommended!
    மேலும் படிக்க
  • A
    aayush on Jan 01, 2025
    5
    The Beauty Of Sedans
    Best car, mileage is also good, maintainance is very affordable, the car look is very dashing, it is full of features, styling of car is very defined and decent that's it.
    மேலும் படிக்க
  • அனைத்து ஸ்லாவியா மதிப்பீடுகள் பார்க்க

ஸ்கோடா ஸ்லாவியா வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Skoda Slavia Review | SUV choro, isse lelo! |14:29
    Skoda Slavia Review | SUV choro, isse lelo! |
    3 மாதங்கள் ago35K Views
  • Skoda Slavia Review & First Drive Impressions - SUVs के जंगल में Sedan का राज! | CarDekho.com16:03
    Skoda Slavia Review & First Drive Impressions - SUVs के जंगल में Sedan का राज! | CarDekho.com
    1 year ago21.7K Views
  • Performance
    Performance
    2 மாதங்கள் ago0K View

ஸ்கோடா ஸ்லாவியா நிறங்கள்

ஸ்கோடா ஸ்லாவியா படங்கள்

  • Skoda Slavia Front Left Side Image
  • Skoda Slavia Grille Image
  • Skoda Slavia Taillight Image
  • Skoda Slavia Wheel Image
  • Skoda Slavia Exterior Image Image
  • Skoda Slavia Exterior Image Image
  • Skoda Slavia Exterior Image Image
  • Skoda Slavia Exterior Image Image
space Image
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the seating capacity of Skoda Slavia?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) The Skoda Slavia has seating capacity of 5.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 10 Jun 2024
Q ) What is the drive type of Skoda Slavia?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The Skoda Slavia has Front Wheel Drive (FWD) drive type.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the ground clearance of Skoda Slavia?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The ground clearance of Skoda Slavia is 179 mm.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 20 Apr 2024
Q ) Is there any offer available on Skoda Slavia?
By CarDekho Experts on 20 Apr 2024

A ) Offers and discounts are provided by the brand or the dealership and may vary de...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the drive type of Skoda Slavia?
By CarDekho Experts on 11 Apr 2024

A ) The Skoda Slavia has Front-Wheel-Drive (FWD) system.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.28,136Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
ஸ்கோடா ஸ்லாவியா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.13.27 - 23.17 லட்சம்
மும்பைRs.12.53 - 21.94 லட்சம்
புனேRs.12.54 - 21.90 லட்சம்
ஐதராபாத்Rs.13.06 - 22.80 லட்சம்
சென்னைRs.13.18 - 22.92 லட்சம்
அகமதாபாத்Rs.11.78 - 20.65 லட்சம்
லக்னோRs.12.40 - 21.61 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.12.39 - 21.84 லட்சம்
பாட்னாRs.12.58 - 22.32 லட்சம்
சண்டிகர்Rs.11.90 - 21.68 லட்சம்

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular செடான் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • புதிய வகைகள்
    டாடா டைகர்
    டாடா டைகர்
    Rs.6 - 9.50 லட்சம்*
  • புதிய வகைகள்
    ஹூண்டாய் வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs.11.07 - 17.55 லட்சம்*
  • ஹோண்டா அமெஸ்
    ஹோண்டா அமெஸ்
    Rs.8 - 10.90 லட்சம்*
  • மாருதி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs.6.79 - 10.14 லட்சம்*
  • புதிய வகைகள்
    வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
    வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
    Rs.11.56 - 19.40 லட்சம்*
அனைத்து லேட்டஸ்ட் சேடன் கார்கள் பார்க்க

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience