• English
  • Login / Register

இந்தியாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை Skoda-VW கூட்டணி உற்பத்தி செய்துள்ளது

published on மே 28, 2024 07:00 pm by dipan for ஸ்கோடா ஸ்லாவியா

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் 3 லட்சம் யூனிட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ் ஆகியவை கூட்டாக தயாரித்துள்ளன.

Skoda Volkswagen group production milestone

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமத்தின் போர்ட்ஃபோலியோ ஸ்கோடா ஸ்லாவியா,குஷாக், கோடியாக், மற்றும் சூப்பர்ப் அத்துடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன், டைகுன், மற்றும் டிகுவான் ஆகிய கார்களை தற்போது உள்ளடக்கியுள்ளது. இப்போது ​​இரு கார் தயாரிப்பாளர்களும் இணைந்து வாகன உற்பத்தி, இன்ஜின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளனர். அவை தொடர்பான பிரத்தியேக தகவல்கள் இங்கே:

சக்கன் ஆலையில் 15 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் தயாரிக்கப்பட்டன

2009 ஆம் ஆண்டு முதல் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் ஸ்கோடா ஃபேபியா ஹேட்ச்பேக்கில் தொடங்கி 15 லட்சம் வாகனங்களை நாட்டில் தயாரித்துள்ளது. இந்த சாதனையில் VW வென்டோ மற்றும் போலோ, மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்ற பிரபலமான  ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாடல்களும், MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடல்களான VW டைகுன் மற்றும் விர்ட்டஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவையும் அடங்கும்.

சக்கன் ஆலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3.8 லட்சத்திற்கும் அதிகமான இன்ஜின்கள்

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமத்திற்கான சக்கன் ஆலையில் உள்ள இன்ஜின் ஷாப் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 3.8 லட்சம் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 1-லிட்டர் TSI இன்ஜினின் பெரும்பாலான ஸ்பேர் பார்ட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் இந்த சாதனை மிகப்பெரிய ஒரு விஷயமாகும்.

இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன

இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுமம் VW டைகுன் மற்றும் விர்ட்டஸ், அத்துடன் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றை வடிவமைத்து தயாரிக்கிறது. இவை அனைத்தும் MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டவை.

30 சதவீத கார்கள் 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன

இந்த குழுமம் தனது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் 30 சதவீதத்தை 40 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் இந்தியா உலகளவில் நான்காவது பெரிய ஏற்றுமதி மையமாக மாற்றியுள்ளது.

மேலும் படிக்க: ஸ்லாவியா ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Skoda ஸ்லாவியா

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience